60 வருடங்களுக்கும் மேலாக இந்திய விமானப்படையின் முதுகெலும்பாகத் திகழ்ந்த மிக்-21 போர் விமானங்கள், விமானப்படையில் இருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெற்றன.
60 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய மிக்-21 ரக விமானத்துக்குப் பிரியாவிடை அளிக்கும் சண்டிகர் விமானப்படை தளத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி மார்ஷல் ஏபி சிங், விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரியாவிடை நிகழ்ச்சியில் மிக்-21 ரக விமானங்கள் வானில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டன. மிக்-21 ரக விமானங்கள் வானில் தேசியக்கொடி வண்ணத்தை வௌியிட்டு பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. மிக்-21 ரக விமானத்திலிருந்து வீரர்கள் பாராசூட்டில் குதித்து சாகசத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்றுக்கொண்டார். மேலும், விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்வுகளை மத்திய அமைச்சர் கண்டு ரசித்தார்.
இதனை அடுத்து, விமானப்படை தளபதி மார்ஷல் ஏபி சிங் தலைமையிலான குழுவினரால் மிக்-21 ரக போர் விமானங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. கடைசியாகத் தரையிறங்கிய மிக்-21 ரக விமானம்மீது தண்ணீரை பீய்ச்சியடித்து பிரியாவிடை அளிக்கப்பட்டது.