கல்வராயன்மலையில் துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே மேல்மதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் தன்னுடைய மருமகனுக்கு கோழியடித்து குழம்பு வைப்பதற்காக நாட்டு துப்பாக்கியால் கோழியைச் சுட்டுள்ளார்.
அப்போது, கோழிக்கு வைத்த குறி தவறி பக்கத்து வீட்டில் இருந்த பிரகாஷ் என்பவரின் தலையில் பாய்ந்துள்ளது. இதில், படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அண்ணாமலையை தேடி வருகின்றனர்.