நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் குஜராத்தில் நெருப்பால் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கலைஞர்கள் நடனமாடினர்.
இந்தியாவில் துர்கா தேவியின் 9 வடிவங்களைப் போற்றும் வகையில், நவராத்திரி விழா 9 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா செப்டம்பர் 22ம் தேதி தொடங்கியது. அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கொண்டாட்டங்கள் நடக்கின்றன.
இதில் கர்பா, தாண்டியா போன்ற நடனங்கள் மிகவும் பிரபலமானவை. அதேபோன்று, குஜராத்தின் ஜாம்நகரில் நேற்றிரவு நெருப்பை வைத்து ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து, அந்த நெருப்பிற்குள் படுத்தும் எழுந்தும் கலைஞர்கள் நடனமாடி அசத்தினர். இந்த நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.