கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாகக் காளிகேசம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்று பரவலாகக் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திற்பரப்பு பகுதியில் 18 சென்டி மீட்டரும், சுருளோடு பகுதியில் 16 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
காளி கேசம் பகுதியிலும் அதிகமாக மழை பெய்து வருவதால், காளிகேசம் ஆற்றில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆற்றில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மழையால் காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரங்கோணம் போன்ற மலையோர கிராமங்களில் ரப்பர் பால் சேகரிக்கும் பணியும் பாதிப்படைந்துள்ளது.