படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், படுக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்தியாவில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது வரை நாடு முழுவதும் ஏசி வசதியுடன் கூடிய 150 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், இந்த வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே உண்டு.
படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த மாதம் 15ம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில், படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் தயார் நிலையில் உள்ள நிலையில், அதிகாரிகள் அதனைப் பார்வையிட்டு வருகின்றனர்.