முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கு காரணமாக, கோவை மாநகர திமுக மாவட்ட செயலாளராக இருந்த நா. கார்த்திக் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
இதனிடையே கட்சியில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை எனக் கார்த்திக் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கோவை மாநகர மாவட்ட செயலாளராகப் பதவி வகித்த கார்த்திக் அப்பதவியிலிருந்து நீக்கப்படுவதாகத் திமுக தலைமை அறிவித்துள்ளது.
அவருக்குப் பதிலாகச் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளரும், பீளமேடு பகுதிச் செயலாளருமான துரை. செந்தமிழ் செல்வனை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக நியமனம் செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நீக்கம் மற்றும் நியமன அறிவிப்புகள் திமுக வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.