சீக்கியர் தலைப்பாகை குறித்த கருத்து தொடர்பான சீராய்வு மனுவை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல், வர்ஜீனியாவில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார்.
அப்போது இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுகிறாரா, குருத்வாராவுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறாரா என்பதற்காகப் போராட்டம் நடக்கிறது எனக் கூறி சர்சையை கிளப்பினார்.
இதுதொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த ஜூலை 21ல் வாரணாசி சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இதனை எதிர்த்து ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், ராகுல் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, வாரணாசி சிறப்பு நீதிமன்றத்தில் சீராய்வு மனுமீதான விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.