பேரறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் குறித்து அவதூறு பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மறைந்த தலைவர்களின் புகழை இழிவுபடுத்தும் நோக்கில் வன்மத்தோடு பேசுவது அரசியல் நாகரிகமற்ற செயல் என கூறப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கே உரித்தான அறத்தை சீமான் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தமிழ்நாட்டின் கொள்கை மற்றும் வளர்ச்சியை செதுக்கிய தலைவர்கள் பற்றி அவதூறாக பேசியதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.