சொன்னபடியே ஜிஎஸ்டி வரியை பிரதமர் மோடி அரசு குறைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரிமுறையைக் கொண்டு வந்த மூன்று மாதங்களுக்குள்ளேயே, “தேசத்தின் வருமானம் அதிகரித்தவுடன் ஜிஎஸ்டி வரி அடுக்குகள் குறைக்கப்படும்” என அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் உறுதியளித்தார்.
நமது பாரதம், தற்போது உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும், உலகின் முதல் ஐந்து பெரிய பொருளாதாரங்களுள் ஒன்றாகவும் திகழ்ந்து சாதனை புரிந்து வரும் வேளையில், சொன்ன வார்த்தைக்கிணங்க நான்கடுக்கு ஜிஎஸ்டி வரியை சீர்திருத்தி இரண்டடுக்காக பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொடுத்த வாக்குறுதியைக் காற்றோடு பறக்கவிட்டு மக்களை வதைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றியதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின் மூலம் தேசத்தின் கடைக்கோடி மக்கள் வரை அனைவரையும் பலனைடயச் செய்துள்ளது நமது பாஜக தலைமையிலான மத்திய அரசு என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி சொன்னதைச் செய்துகாட்டுவதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இணை யாரும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.