கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், கொதிக்கும் பாதாம் பாலை கடை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரத்தை சேர்ந்த மாரிமுத்து – அமுதா தம்பதியின் மகனான ராகுல் என்பவர் அடிக்கடி கஞ்சா உபயோகப்படுத்துவதாக கூறப்படுகிறது. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வேணுகோபால் பிள்ளை தெருவில் உள்ள பாதாம் பால் கடைக்கு சென்றார்.
அங்கு பணிபுரியும் வடமாநில ஊழியர்கள், பாதாம் பாலுக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த ராகுல், கொதிக்கும் பாதாம் பாலை ஊழியர்களின் முகத்தில் ஊற்றினார்.
இதில் அலறி துடித்த ஊழியர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராகுல், காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அறிந்து அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ராகுல் மற்றும் சபரி ஆகியோரை கைது செய்த நிலையில், மேலும் இருவரை தேடி வருகின்றனர்