தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை அவரது பிறந்த தினத்தில் போற்றுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூடடியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ் நாளிதழ்களில் ஒன்றான ‘தினத்தந்தி’ நாளிதழின் நிறுவனர் அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்ததினம் இன்று என தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, தமிழக சட்டசபை சபாநாயகராக என்று தமிழக அரசின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தபடி மக்கள் சேவையாற்றியவர் என்றும் கூறியுள்ளார்.
தினத்தந்தி’ நாளிதழ் மூலமாக அன்றாட நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணிகளை மேற்கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி மற்றும் தமிழர் மீது கொண்டிருந்த அதீத பற்றின் காரணமாக ‘தமிழர் தந்தை’ என்று போற்றப்படுகின்ற சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினத்தில், தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் அவராற்றிய பணிகளை போற்றுவோம் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.