திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4ம் நாள் நிகழ்வில் கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏழுமலையான் கோயில் முழுவதும், பூக்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் காலை நிகழ்வில், கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆட்டம் பாட்டத்துடன் திரளான பக்தர்கள் மலையப்ப சுவாமியை தரிசித்தனர்.