கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விஜயின் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. விபத்து நிகழ்ந்ததற்கான காரணம், சம்பவத்தின் நிலை, மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டார். கூட்ட நெரிசல் ஏற்பட்டது குறித்து கேட்டறிந்த அவர், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதி அளித்தார்.