கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்திற்கு குடியரசு தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும்
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்…