குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக கூறியுள்ளார்.
அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற இறைவனை வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.