கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். கூட்டத்தில் சிக்கி காயமடைந்த 51 பேர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சூழலில், பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கரூர் அரசு மருத்துவர்களை நேரில் சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.