கரூரில் நடந்தது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீளா துயரத்துடன் கனத்த இதயத்துடன் கரூருக்கு சென்று கொண்டிருக்கிறேன் . மாலை வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்த நேரத்தில் வந்த செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்க கூடிய செய்திகளாக இருந்தது. உயிரிழப்புகள் இருக்கக் கூடாது என நினைத்தாலும் உயிரழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வேதனையை தருகிறது. இப்போது நாம் அந்த குடும்பங்களுக்கு ஆதரவாக எந்த அளவிற்கு இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அங்குள்ள குடும்பங்களுக்கு என்ன தேவைப்படுகிறது , என்ன ஆதரவு தேவைப்படுகிறதோ மருத்துவ உதவிகள் போன்றவற்றை அவர்களுடன் இருந்து அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் நான் வந்துள்ளேன். இந்த நிகழ்வு நடந்திருக்கக்கூடாது அரசு இன்னும் கவனத்துடன் இதை கையாண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். ங்கு கூட்டம் வந்தாலும் அந்த கூட்டங்களை எதிர்நோக்கி அதற்குண்டான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை . நான் இவ்வளவுதான் எதிர்பார்த்தேன் அதிகமாக வந்து விட்டார்கள் அதனால் உயிரிழப்பு ஏற்பட்டது எனக் கூறுவது ஒரு காரணமாக இருக்காது என்றும் தமிழிசை தெரிவித்தார்.