கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் சிக்கி கார் ஓட்டுநர் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரபாகரன் மற்றும் அவருடைய மனைவி பாத்திமா பானு ஆகியோர் கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், கூட்டநெரிசலில் சிக்கி பாத்திமா பானு மயக்கமடைந்துள்ளார்.
உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது பாத்திமா பானு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தவெக பிரசாரத்திற்கு குழந்தையை தாயிடம் விட்டு சென்ற பெண் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்ததால் அந்த கிராமே சோகத்தில் மூழ்கியுள்ளது.