பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கோப்பையை இந்தியா கைப்பற்றியது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், வருண் சக்ரவர்த்தி, அக்சர், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
வெற்றி பெற 147 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 5 ரன்களிலும் ஷுப்மன் கில் 12 ரன்களுடனும் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் ஒரே ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடிய திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். இறுதியில் இந்திய அணி 19.5 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 9வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஹாட்ரி வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.