பாகிஸ்தான் அமைச்சர் கையால் ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்துள்ளது.
ஆசிய கோப்பை டி 20 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டது. போட்டி முடிந்ததும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தாமதமானது.
இந்நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையால் ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர்.
தொடர்ந்து கோப்பை, பதக்கம் இல்லாமல் இந்திய அணியினர் வெறும் கையில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு 21 கோடி பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். இந்திய அணி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதகாவும் அவர் கூறினார்.