வேலூரில் உள்ள பர்வதவர்த்தினி அம்மன் கோயிலில் நவராத்திரியை ஒட்டி 5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
சத்துவாச்சாரி பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் நவராத்திரி பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ஆம் நாளில் உற்சவர் பர்வதவர்த்தினி அம்மன் தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும் 5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.