குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு பக்தர்கள் காளியம்மன் வேடமணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்று சென்றனர்.
உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான நவராத்திரி விழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் நாள்தோறும் காளியம்மன், குறவன், குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து காணிக்கை பெற்று நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தசரா திருவிழாவின் 7ஆம் நாளில் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பக்தர்கள் காளியம்மன் வேடமணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்றனர்.