அமெரிக்காவில் Pumpkin Nights கலைவிழா பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
அந்நாட்டின் டெக்சாஸ் மாநிலம் அர்லிங்டனில் உள்ள Howell Farms-இல், Pumpkin Nights எனும் ஹாலோவீன் கலைவிழா கடந்த 18-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழா 7,500 பூசணிக்காய்களை கொண்டு 10 மாய உலகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில், Forbidden City, Pirate’s Cove போன்ற கலைபூர்வமான பகுதிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.