ஆயுதங்களைக் கீழே போட்டால் நக்சல்கள் மீது ஒரு தோட்டா கூடப் பாயாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நக்சல்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா நக்சல்கள் சரண் அடைய விரும்பினால், சண்டை நிறுத்தம் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டால் அவர்கள்மீது ஒரு தோட்டா கூடப் பாயாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் நக்சல்கள் சரண் அடைய விரும்பினால் அவர்களுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு காத்திருப்பதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.