இன்னும் சில தினங்களில் நவராத்திரி பண்டிகை நிறைவடைய உள்ள நிலையில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
இந்தியாவில் பொங்கல், தீபாவளி தொடங்கி விநாயகர் சதூர்த்தி வரை ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு விதமாக விழாக்கள் கொண்டாடப்படும்.
அதில் நவராத்திரி மட்டும் விதிவிலக்கல்ல. வட மற்றும் தென் இந்தியாவில் கொண்டாடப்படும் நவராத்திரி இடையே சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. இந்த ஆண்டு நவராத்திரி கடந்த 22-ம் தேதி தொடங்கியது.
அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரா, தெலங்கானா, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் ஒடிசா, மேற்குவங்கம், அஸ்ஸாம் என நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நவராத்திரி திருவிழா களைகட்டி வருகிறது.
தினந்தோறும் துர்கா தேவி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். அக்டோபர் 2 ஆம் தேதி தசராவுடன் நவராத்திரி பண்டிகையை நிறைவடைய உள்ள நிலையில் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.