உலகிலேயே முதன்முறையாக நிலக்கரி சுரங்கத்தில் தானியங்கி மின்சார லாரிகளைச் சீனா பயன்படுத்தி வருகிறது.
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான இன்னர் மங்கோலியாவின் ஹுவானெங் யிமின் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு லித்தியம் மற்றும் பாஸ்பேட் பேட்டரிகளால் இயக்கப்படும் தானியங்கி மின்சார டிப்பர் லாரிகளைப் பயன்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு தானியங்கி லாரியும் 90 மெட்ரிக் டன் வரை சுமந்து செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று, கடும் குளிர் போன்ற கடுமையான சூழ்நிலைகளிலும் தடை இயங்கும் திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தானியங்கி லாரிகள் 5G-அட்வான்ஸ்டு நெட்வொர்க் மற்றும் செயற்கை நுண்ணறிவு முறைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
2025க்குள் 5,000-க்கும் மேற்பட்ட தானியங்கி லாரிகளைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.