நெல்லையில் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாகக் கூறி 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஜூன் மாதம் நெல்லையை சேர்ந்த ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக வருவாய் பெறலாம் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை நம்பிய அவர், அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு 22 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். எனினும் குறிப்பிட்ட காலத்தில் அந்தநபர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில் கேரளாவை சேர்ந்த சிஜின், சுவி குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.