இந்தியாவில் அதிக நபர்களால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தலமாகத் தாஜ் மஹால் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலக சுற்றுலா தினத்தையொட்டி நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள்குறித்த அறிக்கையை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் வெளியிட்டது.
அதில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால், 2024-25-இல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளால் அதிகம் பாா்வையிடப்பட்ட சுற்றுலாத் தலமாக உள்ளதாகக் கூறியுள்ளது.
உள்நாட்டுப் பயணிகள் 62 லட்சத்து 6 ஆயிரம் பேரும், வெளிநாட்டுப் பயணிகள் 6 லட்சத்து 4 ஆயிரம் பேர் தாஜ் மஹாலை பாா்வையிட்டுள்ளதாக குறிப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக ஒடிஸாவில் உள்ள கோனாா்க் சூரிய கோயிலை 35 லட்சத்து 7 ஆயிரம் பேர் குதுப் மினாரை 32 லட்சம் உள்நாட்டுப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.