உலக இதய தினத்தை ஒட்டி ஈரோட்டில் “வாக்கத்தான்” போட்டி நடைபெற்றது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி உலக இருதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஈரோட்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் “வாக்கத்தான்” போட்டி நடைபெற்றது.
ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு தொடங்கிய வாக்கத்தான் போட்டியில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
எளிய நடைப்பயிற்சியை மேற்கொண்டாலே 80 சதவீதம் இதய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.