அமெரிக்காவில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர்.
டெட்ராய்டிலிருந்து 50 மைல் வடக்கே மிச்சிகனில் கிராண்ட் பிளாங்கில் தேவாலயம் ஒன்று உள்ளது. அங்குப் பலர் கூடியிருந்தபோது திடீரென அங்கிருந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
அதைத் தொடர்ந்து தீ விபத்தும் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயம் அடைந்தனர். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்தியவரைச் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர்.
விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பிரிட்டனை சேர்ந்த 40 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.