மத்தியப் பிரதேசத்தில் கோயில் திருவிழாவில் சாய்ந்து விழுந்த ராட்டினத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மத்தியப் பிரதேசம் ராய்சேன் பகுதியில் கந்தேரா கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினத்தில் பொதுமக்கள் பயணித்து பொழுதை போக்கினர்.
அப்போது ராட்டினம் ஒன்று திடீரென உடைந்து சாய்ந்தபடி நின்றது. ராட்டினத்தில் சிக்கியுள்ளவர்களை போலீசார் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
வரும் காலங்களில் திருவிழாவில் அமைக்கப்படும் ராட்டினங்கள் முறையாகப் பரிசோதிக்கப்பட வேண்டும், என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.