தெலங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ரத்து செய்ததன் காரணமாக பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முந்தைய அரசாங்கத்தில் ராயதுர்கம் முதல் ஷம்ஷாபாத் விமான நிலையம் வரையிலான மெட்ரோ கட்டம் இரண்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆனால் தற்போதுள்ள ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு அந்தத் திட்டத்தை ரத்து செய்தது. இதனால் ஹைதராபாத்தி நூறுக்கும் மேற்பட்ட பி.ஆர்.எஸ் கட்சியினர் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.