தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி சேலத்தில் மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரம் முழுவதும் குறிப்பாகக் கல்வி நிலையங்கள் அதிகமுள்ள சூரமங்கலம், ஜங்ஷன், அஸ்தம்பட்டி, வின்சென்ட், அம்மாபேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு உள்ளிட்ட பகுதிகளில் விஜய்யை கைது செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நள்ளிரவு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களைக் காலையில் தமிழக வெற்றி கழகத்தினர் கிழித்தெறிந்த நிலையில், சேலம் மாநகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.