பெரு நாட்டில் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
பெரு நாட்டின் அதிபர் டினா போலுவார்டேவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் ஜென் ‘Z’ தலைமுறையினரும் போராட்டத்தில் குதித்தனர்.
தலைநகர் லிமாவில் திரண்ட அவர்கள், அரசின் ஊழலுக்கு எதிராகவும் சில பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களமாகக் காட்சியளித்தது.