காசா போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்மொழிந்த 20 அம்ச திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது.
அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, காசா போர் தொடர்பாக ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ட்ரம்ப், காசா போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்ததாகவும், அதனை நெதன்யாகு ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க மறுத்தால், அந்த அமைப்புமீது இஸ்ரேல் கடும் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா ஆதரவளிக்கும் எனவும் அவர் கூறினார்.