லண்டனில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எக்ஸ் பக்கத்தில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையின் கீழ் இந்தியாவுக்கு எதிரான சர்ச்சையான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், மகாத்மா காந்தியின் சிலையைச் சேதப்படுத்திய வெட்கக்கேடான செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் நாசவேலை மட்டுமல்ல, அஹிம்சை கருத்து மற்றும் காந்தியின் மரபு மீதான வன்முறைத் தாக்குதல் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், காந்தி சிலை சேத விவகாரத்தில் வலுவான நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், மகாத்மா காந்தி சிலையின் கண்ணியத்தை மீட்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.