எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த மருத்துவர் உட்பட 3-பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்மன் நகரில் செயல்பட்டு வரும் அரவிந்த் என்ற தனியார் மருத்துவமனையில், மருத்துவர் கண்ணன் கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள குழந்தையை ஸ்கேன் செய்து பாலினம் குறித்து சட்டவிரோதமாகத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை குழுவினர் கர்ப்பிணி ஒருவரை தனியார் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்து சோதனை செய்தனர்.
மேலும், ஸ்கேன் மிஷினை ஆய்வு செய்த அதிகாரிகள் பாலினம் குறித்து சோதனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர் கண்ணன், அவரது மனைவி ஜோதி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.
ஸ்கேன் எடுப்பதற்கு பயன்படுத்திய மிஷின் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்குச் சீல் வைத்தனர்.