உடல்நலக்குறைவால் காலமான பாஜக மூத்த தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ராவின் உடலுக்குப் பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
லாகூரில் பிறந்த விஜய்குமார் மல்ஹோத்ரா 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இருமுறை டெல்லி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
டெல்லியின் முதல் பாஜக தலைவரான இவர் கடந்த 2008ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.
விளையாட்டு துறை நிர்வாகத்திலும் திறம்பட செயல்பட்ட விஜய்குமார், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயல் தலைவர், துணைத் தலைவர் பதவிகளையும் வகித்துள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அதிகாலையில் உயிரிழந்தார்.
இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்குப் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.