இந்தியா – பூடான் இடையே நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் ரயில் பாதைகள் அமையவுள்ளன.
பூடானுடன் இந்தியாவுக்கு வலுவான வா்த்தக உறவு உள்ளது. அதனால் இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்தி பூடான் வா்த்தகம் நடத்தி வருகிறது.
இந்தச் சூழலில் இந்தியா – பூடான் இடையே நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் 89 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் அஸிவிணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இரு ரயில் திட்டங்களுக்கு இடையே 6 ரயில் நிலையங்கள் உள்ளன. 29 பெரிய ரயில் பாலங்கள், 65 சிறிய ரயில் பாலங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
4 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம் இந்தியா மற்றும் பூடான் பொருளாதார வளா்ச்சிக்கும், மக்களின் சா்வதேச தொடா்புக்கும் உதவிகரமாவும் இருக்கும்.