தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் 7 ஆம் நாள் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
மைசூருக்கு அடுத்தபடியாகக் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 2 ஆம் தேதி நள்ளிரவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் காப்புக்கட்டி விரதமிருந்து வரும் பக்தர்கள் பல்வேறு வேடமிட்டு வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். மேலும் திரை பிரபலங்களும் நடனமாடி தசரா திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர்.