வேலூர் அருகே மின் கம்பம் உடைந்து விழுந்து முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி உறவினர்கள் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அணைக்கட்டு கெங்கநல்லூர் பகுதியில் முன்னறிவிப்பின்றி வெட்டப்பட்ட தென்னை மரம் மின் கம்பிகளின் மீது விழுந்துள்ளது.
அப்போது மின் கம்பம் முறிந்து விழுந்ததில் முனுசாமி என்பவர் படுகாயமடைந்தார்.
சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.