கனடாவில் மீன்வலையில் சிக்கிய மிகப்பெரிய திமிங்கலத்தை பல மணி நேரம் போராடி மீட்பு குழுவினர் விடுவித்தனர்.
கனடாவில் உள்ள நானூஸ் விரிகுடா என்பது பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், வான்கூவர் தீவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
இயற்கை அழகு, கடற்கரை மற்றும் நீர் விளையாட்டு போன்றவற்றிற்கு பிரபலமானதாகும். அதேபோல் மீன்பிடி தொழிலிலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் கடலில் மீன்பிடிப்பதற்காகப் போடப்பட்ட வலையில் மிகப்பெரிய திமிங்கலம் சிக்கியது.
தப்பிக்க முடியாமல் போராடிய நிலையில், மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த மீட்பு குழுவினர், சுமார் 6 மணி நேரம் போராடி திமிங்கலத்தை மீட்டனர்.