வங்கதேசத்தில் ஹிந்து, பெளத்த சமூகத்தினர் நடத்திய போராட்டத்தைக் கலைக்க அந்நாட்டு ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
கக்ராச்சாரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி வங்கதேச சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மாவட்ட தலைநகரில் பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பழங்குடியினருக்கும், வங்கதேச சமூகத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதில் கடைகள் மற்றும் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞரைப் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.