மும்பை விமான நிலையத்தில் ஊழியர்கள் மற்றும் பயணிகள் கர்பா நடனம் ஆடும் காணொளி வைரலாகி வருகிறது.
நவராத்திரி, இந்தியா முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மக்கள் தாண்டியா மற்றும் கர்பா நடனங்களில் கலந்து கொள்ளும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
அந்தவகையில், மும்பை விமான நிலையத்திற்குள் ஒரு கர்பா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் பலர் நடனமாடினர்.
இதனை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, உலகில் வேறு எந்த விமான நிலையத்திலும் இவ்வாறு நடந்ததில்லை என்றும், இது இந்தியாவில் மட்டுமே நடந்திருப்பதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், பலர் எதிர்மறையான விமர்சனங்களையும் பதிவிட்டுள்ளனர்.