கோவையில் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதி, விற்பனை அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாடு முழுவதும் புதன்கிழமையன்று ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அப்போது வாழை மரக்கன்றுகள், செவ்வந்தி பூ மாலைகள், பொறிகடலை, மா இலைகள், தர்பூசணி, வண்ண காகித தோரணங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
இதனால் விற்பனை சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே பூ மார்க்கெட் பகுதியில் மக்கள் நடந்து செல்ல இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்களுக்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அபராதம் விதித்தனர்.