பிரம்மோற்சவ விழாவை ஒட்டி திருவண்ணாமலை அருகே உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆவணியாபுரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் கடந்த 23ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை ஒட்டி சுவாமிக்கு தினந்தோறும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் சீனிவாச பெருமாள் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.