ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை ஒட்டி, மாட்டு வண்டி எல்கை பந்தயம் விமர்சையாக நடைபெற்றது.
ஒன்றிய பாஜக சார்பில் நடத்தப்பட்ட இந்த எல்கை பந்தயத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து ஒன்றை ஒன்று முந்திச் சென்ற காட்சிகளை, வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
போட்டியில் வெற்றிபெற்ற காளை உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், ரொக்கப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.