காங்கேயம் அருகே விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்ட முயன்ற திமுகவினருடன் தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பேருந்து நிலையம் அருகே தவெக தலைவர் விஜய்க்கு எதிராக திமுகவினர் போஸ்டர் ஒட்ட முயன்றுள்ளனர். இதனை அறிந்த தவெகவினர் போஸ்டர் ஒட்டுவதை தடுத்து நிறுத்தி இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், காங்கேயம் திமுக நகர செயலாளர் சேமலையப்பன் கூறியதன் பேரில் போஸ்டர் ஒட்டப்பட்டதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, போஸ்டர்களை கைப்பற்றிய தவெகவினர், போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்ட அஸ்வந்த் என்ற இளைஞரையும் பிடித்து காங்கேயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக புகார் மனு அளித்தபோதும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்து விட்டதாக தவெகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.