இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்-க்கும், பாடகர் சைந்தவிக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக கடந்த ஆண்டு இருவரும் அறிவித்தனர்.
இதையடுத்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். சைந்தவி, குழந்தையை கவனித்து கொள்ள தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையென ஜி.வி.பிரகாஷ் கடந்த விசாரணையின்போது நீதிபதியிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி செல்வ சுந்தரி தீர்ப்பளித்தார். அப்போது இருவருக்கும் விவகாரத்து வழங்குவதாக கூறிய நீதிபதி, குழந்தையை தாய் சைந்தவி கவனித்து கொள்ள அனுமதி வழங்கினார்.