கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாளேகுளி முதல் சந்தூர் வரை நடைபெறும் ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாளேகுளி ஏரியில் இருந்து சந்தூர் ஏரிவரை உள்ள 28 ஏரிகளுக்கு ஆண்டுதோறும் கால்வாய் மூலம் தண்ணீர் நிரப்பி வரும் நிலையில், கடைமடை ஏரியான கூச்சானூர் பெரிய ஏரிக்குத் தண்ணீர் கிடைக்காததால் ஏரியை தூர்வார மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்படி, என்.தட்டக்கல் ஏரியில் இருந்து வீரமலை ஏரிக்கு செல்லக்கூடிய பகுதியில் நடைபெற்று வந்த தூர்வாரும் பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
13 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் எடுப்பதற்காக நிலம் வழங்கியவர்களுக்கு தற்போது வரை இழப்பீடு வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.